உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுராவில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்து பலரிடம் பரவி வரும் நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம நோய் ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த வாரத்தில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் மதுராவில் உள்ள கோன் கிராமத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த மர்ம காய்ச்சலால் மதுரா, ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஆக்ரா ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இதுவரை 80 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை தெரிவிக்கையில், கடந்த திங்கள் கிழமை அன்று சிகிச்சையில் இருந்த குழந்தைகள் சேவாக்(9), ஹனி(6) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் அதிக காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இதே அறிகுறிகள் குறித்து தெரிவித்த பிறகு, இறந்த மற்றவர்களில் மேலும் நான்கு பேர் இந்த அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர். ருச்சி(19), அவனிஷ்(9), ரோமியா(2) மற்றும் ரேகா(1) ஆகியோர் இதே அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர்.
தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரச்சனா குப்தா கூறுகையில், மருத்துவ குழுவினர் கிராமத்திற்கு வருகை தந்து மலேரியா, டெங்கு மற்றும் கோவிட் நோய்த்தொற்றுக்கான மாதிரிகளை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் எடுத்துக்கொண்டனர்.
இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, டெங்கு காய்ச்சலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் கூறினர், ஏனெனில் அவர்களின் இரத்தத் தட்டுக்கள் காய்ச்சலுடன் குறைவாக இருப்பது இதில் கண்டறியப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு காய்ச்சல் அல்லது அது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…