உத்தரப்பிரதேசம்: மர்ம காய்ச்சலால் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!

Default Image

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

மதுராவில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்து பலரிடம் பரவி வரும் நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம நோய் ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த வாரத்தில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் மதுராவில் உள்ள கோன் கிராமத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த மர்ம காய்ச்சலால் மதுரா, ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், ஆக்ரா ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இதுவரை 80 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை தெரிவிக்கையில், கடந்த திங்கள் கிழமை அன்று சிகிச்சையில் இருந்த குழந்தைகள் சேவாக்(9), ஹனி(6) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் அதிக காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இதே அறிகுறிகள் குறித்து தெரிவித்த பிறகு, இறந்த மற்றவர்களில் மேலும் நான்கு பேர் இந்த அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர். ருச்சி(19), அவனிஷ்(9), ரோமியா(2) மற்றும் ரேகா(1) ஆகியோர் இதே அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர்.

தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரச்சனா குப்தா கூறுகையில், மருத்துவ குழுவினர் கிராமத்திற்கு வருகை தந்து மலேரியா, டெங்கு மற்றும் கோவிட் நோய்த்தொற்றுக்கான மாதிரிகளை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் எடுத்துக்கொண்டனர்.

இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, டெங்கு காய்ச்சலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் கூறினர், ஏனெனில் அவர்களின் இரத்தத் தட்டுக்கள் காய்ச்சலுடன் குறைவாக இருப்பது இதில் கண்டறியப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு காய்ச்சல் அல்லது அது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்