உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதுர்பூர் கிராமத்தைச் சேந்தவர் அகிலேஷ் ராவத். இவருடைய மனைவி ரஜனி. அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையானது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது.
இதன் பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொண்டே வந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது அப்போது அகிலேஷ் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கி அவரை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து தள்ளி உள்ளார். அதன் பின் ரஜனியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கடுமையாகத் தாக்கி உள்ளார்.இரத்த வெள்ளத்தில் கிடந்த ரஜனி படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான போதும் அவரை விடாமல் கணவன் பட்டப்பகலில் அவருடைய தலையை வெட்டி அதை கையில் எடுத்துக் கொண்டு 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கையில் தலையோடு அங்கிருந்த காவல் நிலையத்தை நோக்கி சென்ற அவரைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.அவரிடம் இருந்து தலையை பறிக்க முயன்றனர். இதனை அடுத்து கொடூர கணவன் தேசிய கீதம் படித்த படியும், பாரத் மாதாகீ ஜே என்று சொன்னபடியே இருந்து உள்ளார். இவ்வாறு கூறிக்கொண்டே இருந்த போது ஒரு வழியாக தலையைப் பறித்த காவல்துறை அவரை கைது செய்தது.
இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை பதற வைத்துள்ளது.இந்த கொடூரம் தொடர்பாக அம்மாவட்ட எஸ்பி.,கூறுகையில் குடும்பத்தகராறில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்து வந்துள்ளார் என்று தெரிவித்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…