உ.பி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்.. தேர்தல் கள நிலவரம்..!

மக்களவைத் தேர்தல் : பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 290க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா நிலவரம்
மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு, சிவசேனா 10 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலை வகுத்து வருகிறது. சிவ சேனா (உத்தவ் தாக்கரே) 7 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் பின்னிலையில் உள்ளது.
மேற்கு வங்காளம் நிலவரம்
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, பாஜக 2 இடங்களை இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் பின்னிலையில் உள்ளது.
உத்தரப் பிரதேசம் நிலவரம்
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. அதில், பா.ஜ.க 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி 29 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் தளம் 2 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 1 இடங்களிலும் பின்னிலையில் உள்ளது.