உத்தரபிரதேச அரசால் அண்மையில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தின் கீழ், ஒவைசி அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை, திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதை தடுக்க , பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்தது.இந்த சட்டத்தின்படி,திருமணத்திற்காக ஒரு நபரை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது.அவ்வாறு ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருமணத்திற்குப் பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆகவே யோகி அரசு ,மதமாற்ற தடை அவசர சட்டத்தை அண்மையில் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்திற்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபன் படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் ,உ.பி காவல்துறையினர் முதல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.ஒவைசி அகமது என்பவர் மீது பரேலியில் உள்ள தியோரானியா காவல்துறையினர் வேறு மத பெண்ணை மதம் மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவை அச்சுறுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…