மதமாற்ற தடை சட்டம் ! ஒவைசி அகமது என்பவர் மீது முதல் வழக்குப் பதிவு

Default Image

உத்தரபிரதேச அரசால் அண்மையில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தின் கீழ், ஒவைசி அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  அமைச்சரவை, திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதை தடுக்க , பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்தது.இந்த சட்டத்தின்படி,திருமணத்திற்காக ஒரு நபரை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது.அவ்வாறு ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருமணத்திற்குப் பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆகவே  யோகி அரசு ,மதமாற்ற தடை அவசர சட்டத்தை அண்மையில் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்திற்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபன் படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் ,உ.பி காவல்துறையினர் முதல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.ஒவைசி அகமது என்பவர் மீது பரேலியில் உள்ள தியோரானியா காவல்துறையினர் வேறு மத பெண்ணை மதம் மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவை அச்சுறுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்