உ.பி. போலிஸுக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா..? – ப.சிதம்பரம்..!
உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர்.
அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். பின்னர், 144 தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி சென்றதால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டார்.
ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் எந்த ஆயுதங்களையும் கொண்டு செல்லவில்லை..? அமைதியான வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியது ஏன்..? உத்தரப்பிரதேச போலீசுக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா..? என பா சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Why should the UP police arrest the two leaders and take them away?
I hope the Court where the leaders will be produced will release them forthwith
— P. Chidambaram (@PChidambaram_IN) October 1, 2020