பாஜக ஆட்சியில் உ.பி இருளில் இருந்து மீண்டு பிரகாசமாகியுள்ளது.! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்.!
டெல்லியை தலைமையிடமாக கொண்ட தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு – FICCI-இன் தேசிய செயற்குழு கூட்டம் இன்று உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 1985-86க்கு பிறகு, உத்திரபிரதேசத்தின் வளர்ச்சியில் நீண்ட கால இருள் சூழ்ந்து இருந்தது. ஆனால் தற்போது உத்திர பிரதேசம் பற்றிய கருத்து மிகவும் வித்தியாசமாக மாறியுள்ளது. இங்கு இளைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் குடிமக்கள் முன் முன்னதாக ஓர் நெருக்கடி நிலை இருந்தது.
ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் படியும், எனது தலைமையிலான ஆட்சியின் கீழும், உத்தரபிரதேசம் இருளில் இருந்து மீண்டு பிரகாசமாக மாறியுள்ளது. இது மேலும் உயர்ந்து, உ.பி வளர்ந்த மாநிலமாக மாறும் என அந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.