பிரதமர் வருகையின் பொழுது கூட்டம் கூட்டுவதற்கு உ.பி அரசு பொது பணத்தை செலவிடுகிறது – பிரியங்கா காந்தி!
பிரதமர் வருகையின் பொழுது கூட்டம் கூட்டுவதற்கு தான் உத்தர பிரதேச அரசு பொது பணத்தை செலவிடுகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல கிராமத்தில் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. கொரோனா ஊரடங்கின் பொழுது கால்நடையாக சென்ற தொழிலாளர்களுக்கு உதவ உத்தர பிரதேச அரசு முன்வரவில்லை.
ஆனால், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் வருகையின் பொழுது கூட்டத்தை கூட்டுவதற்காக பொது பணத்தை செலவழிக்கிறார்கள் எனவும், பாஜக கட்சியின் அரசியல் சொல் அரசியல் மட்டும் தான், ஆனால் செயல் குறைவாகத்தான் இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
उप्र के गांव-गांव में भाजपा के प्रति गहरी नाराजगी है। भाजपा की ‘जुमलों की दुकान, फीके पकवान’ वाली राजनीति को बच्चा-बच्चा समझ चुका है।
इसलिए करोड़ों लगाकर बस चेहरा बचाने की कवायद चल रही है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 16, 2021
`