சர்வாதிகார போக்கை உ.பி அரசு கைவிட வேண்டும் – ஹட்ராஸ் சம்பவத்துக்காக கண்டனம் தெரிவிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஹட்ராஸ் எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து மத்திய அரசையும் உத்திரப்பிரதேச முதல்வரையும் கண்டித்து வரக்கூடிய நிலையில், தற்போது எதிர்க்கட்சியினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செல்லும் பொழுது உத்தரப்பிரதேச மாநிலத்தின் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்வதும் கண்டனத்தை வலுக்க செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அவர்கள், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வது நாடு முழுவதிலும் எரிச்சலை உண்டாக்குவதுடன், அரசு தனது தவறை சரிசெய்து அக்குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பது மிக கடினமாக மாறும் எனவும் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதில் மட்டுமே தற்போது அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அரசின் செயல்களால் ஜனநாயகத்தின் வேர் பாதிக்கப்படுவதாகவும் மாநில அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…