‘உ.பி. அரசின் மவுனம்’ வருத்ததையும், கவலையும் அளிக்கிறது – மாயாவதி
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கிடையில், பெண்ணின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் அச்சுறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கவலை தெரிவித்தார்.
இது குறித்து மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் அச்சுறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது இருந்தபோதிலும், உ.பி. அரசு மவுனம் காத்து வருகிறது, இது வருத்ததையும் மிக கவலையும் அளிக்கிறது.
மேலும், சிபிஐ விசாரணைக்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் மாஜிஸ்திரேட் அங்கு தங்கியிருப்பதால் இந்த விஷயத்தை எவ்வாறு விசாரிக்க முடியும்? மக்கள் பயப்படுகிறார்கள் என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
हाथरस गैंगरेप काण्ड के पीड़ित परिवार ने जिले के डीएम पर धमकाने आदि के कई गंभीर आरोप लगाए हैं, फिर भी यूपी सरकार की रहस्मय चुप्पी दुःखद व अति-चिन्ताजनक। हालाँकि सरकार CBI जाँच हेतु राजी हुई है, किन्तु उस डीएम के वहाँ रहते इस मामले की निष्पक्ष जाँच कैसे होे सकती है? लोग आशंकित।
— Mayawati (@Mayawati) October 4, 2020