#Breaking:5 மாநில சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது… வாக்கு எண்ணிக்கை!

Published by
Edison

உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.அதைப்போல, உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில்,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில்,பிற்பகலுக்குள் முன்னிலை முடிவுகள்  வெளியாகவுள்ளன.

இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஜூலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்,2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

7 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

20 minutes ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

2 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

11 hours ago