கொரோனாவை வென்று வந்த மருத்துவர் பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார் !
கொரோனாவை வென்று வந்த உத்திர பிரதேச மருத்துவர் பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவில் பணியாற்றும் டாக்டர் தவுசீப் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது இவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார். இதேப்போல் குணமடைந்த அனைவரும் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து மற்றவர்களுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.