காங்கிரஸ் பிரச்சனைகளை தருகிறது.. தீர்வுகளை பிரதமர் தருகிறார்.! உ.பி முதல்வர் பேச்சு
இம்மாதம் நடைபெற்று வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் என்பது 2024இல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஓர் முன்னோட்டமாக பார்க்கப்டுகிறது. இந்த 5 மாநிலத்தில் மிசோராம் , தெலுங்கானா தவிர்த்து மற்ற 3 மாநிலங்களும் பாஜக , காங்கிரஸ் நேரடி போட்டியாக நிலவி வருகிறது.
தெலுங்கானாவிலும் , மிசோராமிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. அங்கு பாஜக தலா 1 இடத்தையே கடந்த முறை வென்று இருந்தது. அதனை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் தான் கடந்த முறை அதிக இடங்களை கைப்பற்றி இருந்தது. இதில் மத்திய பிரதேசத்தை தவிர்த்து மற்ற இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ம.பியில் அரசியல் மாற்றம் நிகழ்ந்து பாஜக ஆட்சி செய்து வருகிறது.
காங்கிரஸில் இணைந்த நடிகை விஜய சாந்திக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு…!
இதனால் இந்த முறை மாநில ஆட்சியை கைப்பற்றி அதனை ஒரு உத்வேகமாக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் களம் காண பாஜக ஆயத்தமாகி வருகிறது. இதனால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட மற்ற மத்திய அமைச்சர்கள் என பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகையில், பாஜக ஆட்சியில் செய்தவை பற்றி கூறுவதை காட்டிலும் அதிகமாக காங்கிரஸ் மீதான விமர்சனத்தை முன்வைக்க தவறவில்லை. அதே போல தான் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
பார்மர் பகுதியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், நமது நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்று காங்கிரஸ் கூறி வருகிறது. நாட்டின் வளங்களுக்கான உரிமை முதலில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குத்தான் இருக்கிறது.காங்கிரஸ் எப்போது புதிய இந்தியாவுக்கு பிரச்சனைகளை தான் தருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதற்கான தீர்வுகளை தருகிறது என நேற்றைய பிரச்சார கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.