அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் கால் வைக்க வேண்டும்! இல்லை சம்பளத்தில் கை வைக்கப்படும் – அதிரடி
உtத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்த நாத் அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.யோகி தனது மாவட்டங்களில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று அண்மைகால தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.இருந்தாலும் அங்கு பாலியல் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பிற மதத்தினரிடம் வன்முறையில் ஈடுபடுவதும் நடந்து வருவது கண்டனத்துகுரியது.
தற்போது அந்த மாநில முதல்வர் ஒரு அறிவிப்பை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அரசு அதிகாரிகள் சரியாக காலை 9 மணிக்கு எல்லாம் தங்களது அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அரசு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு தங்களது வேலைக்கு வரவில்லை அவர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.அதே போல் மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டு- காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் சரியாக காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை மக்களை சந்திக்க வேண்டும் என்று அவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.சற்று கலக்கத்தில் அரசு அதிகாரிகள் உள்ளனர்.