உ.பி முதல்வர் யோகியால் பிரான்ஸ் கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்..! ஜெர்மன் பேராசிரியர்

FranceProtest

உ.பி முதல்வர் யோகியால் பிரான்ஸ் கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் என ஜெர்மன் பேராசிரியர் ஜான் காம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த 27ம் தேதி நடந்த போக்குவரத்து சோதனையின் போது 17 வயது இளைஞன் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து, பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர், கொல்லப்பட்ட இளைஞனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது நான்கு நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களால் பிரான்ஸ் கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் ஜெர்மன் பேராசிரியர் ஜான் காம் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்ட ட்வீட்டில், இந்தியா யோகி ஆதித்யநாத்தை பிரான்சு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த அனுப்ப வேண்டும். அவர் அந்த கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மாநில அரசு, உலகின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதம் கலவரங்கள், குழப்பங்கள்  ஏற்பட்டாலும், உலகம் ஆறுதல் தேடுகிறது. மேலும், உத்தரபிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு அரணாக திகழும் யோகி ஆத்யநாத் போன்ற ஒருவருக்காக ஏங்குகிறது என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்