உ.பி. முதல்வர் நொய்டா வருகை..144 தடை, ட்ரோன்களுக்கும் தடை .!
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் புதிதாக கொரோனா தடுப்பு அரசு மருத்துவமனை நொய்டா பகுதியில் அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையை இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
இதனால், நொய்டாவிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைதருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் நேற்றும், இன்றும் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமாக கொரோனா வைரசால் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். 63,000 மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 1,900-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.