உத்தரபிரதேசம் : நொய்டா சாலையில் நண்பருடைய பிறந்த நாளை இளைஞர்கள் கூட்டமாக அரை நிர்வாணத்துடன் ஆட்டம் போட்டு கொண்டாடிய நிலையில், போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சாலையில் நின்று கொண்டு சட்டையை கழட்டி கையில் மதுபாட்டிலுடன் ஆட்டம் போட்டு அந்த இளைஞர்கள் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.
இரவு நேரம் என்று கூட பார்க்காமல் நடு சாலையில் தாங்கள் வந்த கார்களை நிறுத்திவிட்டு அதில் பாடல்களை போட்டு கொண்டு அதிகமாக சத்தம் எழுப்பினர். பொலிரோ காரின் மேற்கூரையில் இருந்து ஒருவர் மதுபானத்தை சாலையில் தெளித்துக்கொண்டு இருந்தார். கீழே போதையில் இருந்த நண்பர்கள் பாடல்களை போட்டு நடனமாடவும் செய்தனர்.
இது அப்பகுதியில் சென்று கொண்டு இருந்தவர்களை முகம் சுளிக்கும் வகையில் செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், பலரும் உடனடியாக இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைத்தளங்களின் மூலம் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுனில், சிந்தி, ரோஹித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அத்துடன், அவர்கள் வந்த பொலிரோ கரை பதிவு எண் UP16 DJ6170 207 MV சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…