வேளாண் சட்டங்களை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்த உ.பி பாஜக தலைவர்…!

Default Image

வேளான் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவரான பிரியம்வாட தோமர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 140 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதற்கு இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவரான பிரியம்வாட தோமர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் சுவாதந்திர தேவ் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. விவசாயிகள் மீதான அரசாங்கத்தின் பிடிவாதம், புறக்கணிப்பு மற்றும் உணர்வற்ற தன்மை இவற்றால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். எனவே எனது மனசாட்சியின் படி, மாநில நிர்வாக உறுப்பினர், முதன்மை உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்