ஆக்ஸிஜன் குறைபாட்டால் 60க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்! டாக்டர் கபில் கான் மீது தவறில்லை!
மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் குறைபாட்டு காரணமாக 60-கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மருத்துவமனை நிர்வாகம் பற்றியும், சுகாத்துறை பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்த கொடுமை அரங்கேறிய இடம் உத்திர பிரதேச மாநிலத்தில், கோரக்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக 60க்கும்மேற்பட்ட குழைந்தைகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, டாக்டர் கபில் கான் மற்றும் தலைமை மருத்துவர் ஆர்.கே.மிஸ்ரா ஆகியோர் உட்பட 7 பேர் மீது, அலட்சியம், ஊழல், கடமையை சரியாக செய்யவில்லை என 3 பிரிவிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இந்த 7 பேரும் 9 மாத சிறை தண்டனை பிறகு இவர்கள் ஜாமீனில் வெளியவந்தனர். தற்போது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவர் கபில் கான் மீது தவறில்லை என விசாரணை குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவர் குழந்தைகளை காப்பாற்ற மிகவும் போராடினார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் போராடினார். இதற்கு முன்னர் பல உபகரணங்களை தன் சொந்த பணத்தில் வாங்கியுள்ளார். என கூறப்படுகிறது.
இதுகுறித்து கபில் கான் கூறுகையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், நான் இந்த குற்றத்தில் பலிகடா ஆக்கப்பட்டேன் என தெரிவித்தார்.