கோவாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார்.
கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞருக்கும வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3000 வேலையில்லா உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. டெல்லியில் உள்ள உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கேளுங்கள் அவர்கள் மறுத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம். இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம். அவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு மாதம் ரூ.3,000 வேலையில்லா உதவித்தொகை வழங்குவோம் என்றார்.
முன்னதாக, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…