அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததை தொடர்ந்து டெல்லி கமிஷனர் விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்ட களமான சிங்கு எல்லைப் பகுதிக்கு நேற்று சென்று விவசாயிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று நாடு தழுவிய பாரத் பந்த் என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் முதல்வர் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, எனவும் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இதுகுறித்து டெல்லி சிறப்பு கமிஷனர் சதீஷ் கோல்ச்சா கூறுகையில், கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது ஆதாரமற்ற குற்றசாட்டு, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர் வெளியே சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…