44 ஆண்டுகளில் இல்லாத அளவான மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

Default Image

44 ஆண்டுகளில் இல்லாத அளவான மழை ஆகஸ்ட் மாதத்தில், 25% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் வழக்கத்தை விட குறைவாக பெய்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும்  25% அதிக மழை பெய்ததுள்ளது.

இந்நிலையில் மத்திய இந்திய பகுதிகளில் பெய்த கனமழை கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடக்கின்ற ஆகஸ்ட் மாதத்தில், 25 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1976 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வழக்கத்தை விட 28.4% அதிக மழை பெய்ததுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை 8% அதிகமாக உள்ளது. தெற்கு தீபகற்பத்தில் 23% அதிக மழை பெய்தது இது மத்திய இந்தியாவை விட 16% அதிகமாகும். பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தொடரும்.

அந்த வகையில், கிழக்கு மத்திய பிரதேசத்தில் மிக அதிக மழை பெய்தது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவிலும் பலத்த மழை பெய்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்