#BigBreaking:அதிர்ச்சியின் உச்சம் ஒரே நாளில் 3.5 லட்சம் பேர் பாதிப்பு;2,621 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 345,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 345,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,602,456 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 25,50,788 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 13,862,119 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,621 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,89,549. ஆக உயர்ந்துள்ளது
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 24,331 க்கும் மேற்பட்டவர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 348 பேர் உயிரிழந்துள்ளனர். . இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 66,836 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 773 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் முறையே 12,876 மற்றும் 37,238 பேருக்கு புதியதாக தொற்று பதிவாகியுள்ளது.
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா (4,161,676), கேரளா (1,322,054), கர்நாடகா (1,247,997), தமிழ்நாடு (1,037,711), மற்றும் ஆந்திரா (997,462), உத்தரப்பிரதேசம் (976,765) ஆகியவையாகும்.