உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் சென்றாண்டு ஒரு கும்பலால் பாலியல் பலகாரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை ராய் பரோலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதற்காக சம்பவத்தன்று நீதிமன்றம் நோக்கி பாதிக்கப்பட்ட பெண் சென்று கொண்டிருக்கும் போது, கவுரா எனும் திருப்பத்தில் ஒரு கும்பல் வழிமறித்து அப்பெண்ணை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.
இக்கோர சம்பவத்தில் உடம்பில் 90 சதவீத தீக்காயங்களுடன் அப்பெண் சுமார் 1 கிமீ தூரம் ஓடி அருகில் இருந்த கிராமத்தில் உதவி கேட்டுள்ளார். அங்குள்ளவர்கள் போலீசிற்கு தகவல் கூறி போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அப்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹரி ஷங்கர், திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய் , ஷிவம் திரிவேதி, ஷுபம் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஷிவம் திரிபாதி , ஷுபம் திரிபாதி ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலில் இருந்தவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…