உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சிவன் மற்றும் சுபம் திரிவேதி என்ற இருவரால் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் மாதம் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். முதலில் இந்த பெண் கொடுத்த புகாரை காவல்துறையினர் எடுக்கவில்லை.
பின்னர் அந்த பெண் நீதிமன்றம் சென்ற பின் காவல்துறையினர் புகாரை எடுத்துக் கொண்டனர். அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்து சிவத்தை மட்டும் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியானசுபம் திரிவேதி தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
சிவன் கடந்த சில நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிவன் மற்றும் திரிவேதி ஆகியோர் தனது நண்பருடன் சென்று ரயில் நிலையத்திற்கு அருகே அப்பெண்ணை வழிமறித்து பயங்கரமாக தாக்கி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இதையடுத்து அதிகபட்ச காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அப்பெண் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை வன்கொடுமை செய்த 2 பேர் உட்பட ஐந்து பேர் சேர்ந்துதான் தீ வைத்ததாக அவர் கூறினார். பின்னர் தீ வைத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோவில் 90 சதவீதம் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் விமானம் மூலமாக அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
உயிருக்கு போராடி வந்த பெண் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார். இந்தியாவில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நாடே அதிர்ச்சியில் உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…