உன்னாவ் வழக்கு : உத்தரவுகளை பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
உன்னாவ் பாலியல் வன்கொடுமை மற்றும் விபத்து வழக்கை உ.பி.யில் இருந்து இடம் மாற்ற உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நண்பகல் 12 மணிக்கு உன்னாவ் வழக்கில் உத்தரவுகளை பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.
உன்னாவ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி 12 மணிக்கு நேரில் ஆஜராகி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.