உன்னாவ் வழக்கு : 16 ஆம் தேதி தீர்ப்பு

Published by
Venu
  • உன்னாவில் இளம் பெண்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
  • பாலியல் வழக்கில் வரும் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் குல்தீப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய், உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் தீவிர சிகிச்சையில் பெற்று வந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க  உத்தரவு பிறப்பித்தது.

மேலும் உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்தும் உ.பி.யில் இருந்து டெல்லி  நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது .வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்ட பின்னர் 45 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனை தொடர்ந்து 45 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.அப்பொழுது சிபிஐ தரப்பில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் அவரது கூட்டாளிகள் மீது குற்றாச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை வரும் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி நீதிமன்றம்.

 

 

 

Published by
Venu

Recent Posts

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

26 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

36 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

1 hour ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

3 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

3 hours ago