உன்னாவ் வழக்கு : விசாரணை நடத்த சிபிஐக்கு 2 வாரம் கால அவகாசம்
உன்னாவ் விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சிபிஐக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் குல்தீப் சிங்கும், அவரது கூட்டாளிகளிலும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே புகார் கொடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டதாகவும், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர், அவரது தாய், உறவினர் பெண் ஆகியோர் சென்றபோது திடீரென லாரி மோதி அந்த பெண்ணின் தாயும், உறவின பெண்ணும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் சிபிஐக்கு அவகாசம் வழங்கியுள்ளது.சிபிஐ 4 வாரம் அவகாசம் கேட்ட நிலையில் உச்சநீதிமன்றம் 2 வாரம் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளது.மேலும் விபத்தில் சிக்கிய பெண்ணின் வழக்கறினருக்கு உத்திர பிரதேச அரசு இடைக்கால நிதியாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்ததுள்ளது உச்சநீதிமன்றம்.