Unlock4.0 : வெளிநாட்டு விமான சேவைக்கு தடை தொடரும்.!
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பில், வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.