Unlock 4.0: செப்-1 முதல் மெட்ரோ ரயில் மீண்டும் தொடங்குமா.? பள்ளிகளை எப்போது.?
செப்டம்பர்- 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படும் ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்.
செப்டம்பர்- 1 முதல் தொடங்க இருக்கும் ‘அன்லாக் 4’ கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் இதுவரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாத பார்கள், மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படலாம் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது.
அன்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெட்ரோ சேவைகளை மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஊரடங்கு மீண்டும் ‘அன்லாக் 4’ கட்டம் தொடங்கும் போது செப்டம்பர் 1 முதல் மெட்ரோ ரயில் சேவைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உடனடியாக மீண்டும் திறக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாத இறுதியில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.