பொதுமுடக்க தளர்வு 2.0 : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது ஜூலை 31 வரையில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், முக்கியமானவற்றை கீழே காணலாம்.
கொரோனா உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூலை 31 வரையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு.
இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் பொதுமக்கள் வெளியேவர தடை.
நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளை திறக்க ஜூலை 31 வரையில் தடை.
அனுமதிக்கப்பட்ட விமானங்களை தவிர மற்ற விமான சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தடை.
சினிமா தியேட்டர், மால், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களை திறக்க ஜூலை 31 வரையில் தடை.
அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள், மத கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 31 வரையில் தடை தொடரும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.