Unlock 1.0: மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. புதிய SOPs வெளியீடு.!

Default Image

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.

UNLOCK 1.0  கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது.

UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மால்களில் வரும்பொழுது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.நுழைவு வாயில் சானிடைசர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். 

உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பின்ப்பற்ற வேண்டும். மெனு கார்டுகளை ஒவ்வொரு முறையும் மாற்றி பயன்படுத்த வேண்டும். துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,
கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். சமூக தொலைதூர இடைவெளி உறுதிப்படுத்த ஹோட்டல் நிர்வாகம் போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும். ஷாப்பிங் மால்களில் உள்ள திரையரங்குகளை  திறக்க அனுமதி இல்லை.டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். உணவு விநியோக ஊழியர்கள் உணவு பார்சலை நேரடியாக மக்களுக்கு கொடுக்கக்கூடாது.

ஆன்மீக ஆறுதலுக்காக வழிபாட்டுத் தலங்கள் ஏராளமான மக்களால் அடிக்கடி வருகின்றன.கோரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க,அந்த இடங்களில் தேவையான சமூக தூர மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது முக்கியம்.வழிபாட்டு தளங்களில் சிலைகள் போன்றவற்றைத் தொடக்கூடாது என்று பக்தர்களுக்கு எஸ்ஓபி அறிவுறுத்தல் .ஒருவரின் சொந்த வாகனத்திற்குள் காலணிகள் கழற்ற வேண்டும். புனித நீரைத் தெளித்தல், பிரசாதங்கள் மத இடத்திற்குள் அனுமதிக்கப்படாது 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்