இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை போல், 3-வது அலை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை – ஐ.சி.எம்.ஆர்

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை போல், 3-வது அலை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்தியாவை மூன்றாவது அலை தாக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை போல், 3-வது அலை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் கட்டுப்படுத்த, தடுப்பூசி மிகவும் முக்கியமானதாகும். ஆய்வின்படி, மூன்றாவது அலையை உருவாக்கும் கொரோனா வைரஸானது புதிய மாறுபாட்டை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதிக அளவில் பரவக்கூடியது மற்றும் அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட 3 முக்கிய வழிமுறைகள் 

தனிப்பட்ட நடத்தை மற்றும் சமூக காரணிகள்:

முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடத்தல் ஆகியவை கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகும். இது மக்கள் மத்தியில் பரவலை ஏற்படுத்தக்கூடியது. எனவே கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம்.

சுகாதார அமைப்புகள்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது மூலம் மருந்துகளின் தலையீடு இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க முடியும். வடகிழக்கு மாநிலங்கள் கொரோனா  உச்சத்தை அடைவதற்கு முன்பதாகவே இரண்டாவது அலையை தடுக்கும் விதமாக ஆரம்பத்திலேயே ஊரடங்கை அமல்படுத்தினர்.

மூன்றாவது அலையை கட்டுப்படுத்த சுகாதார அமைப்புகள் ஒட்டுமொத்தமாக கைகோர்த்து செயல்பட வேண்டும். சுகாதார அமைப்புகள் இணைந்து மூன்றாவது அலை ஏற்படுவதற்கு முன்பாக, அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கைகொள்வதன் மூலம் இந்த தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட முடியும்.

தடுப்பூசி

தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவது வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தான். 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, நோய் எதிர்ப்பு சக்திகளையும் தாண்டி தாக்கும் அளவிற்கு காணப்பட்டால், இந்த தடுப்பூசிகள் நமது உடலை அந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மூன்றாவது அலை பரவலை தவிர்க்க முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03032025
India vs Australia - 1st Semi-Final
KKR captain Ajinkya Rahane
mkstalin
Heavy rains
Narendra Modi lion
mk stalin about all party meeting