உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு நீக்கமா? மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பாக யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்திருந்தது.

இதனைத்தொடர்ந்து உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கு இது வழிவகுக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து விமர்னங்களும், கண்டனங்களும் எழுந்தன. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

இந்நிலையில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இட ஒதுக்கீடு தொடர்பான 2019-ம் ஆண்டு சட்டத்தையே தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்