பல்கலைக்கழக இசை நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு..!

கேரளா, கொச்சி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மக்கள் கூடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 40 மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025
Chief Minister Stalin - Ministry of External Affairs
India Vs Pakistan toss
dragon vs neek box office collection