மத்தியப் பிரதேசத்தில் செப்.15 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 50% மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு.
கொரோனா தொற்றுநோய் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 15ம் தேதி முதல் 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வி அமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் குறைந்தது 1,400 கல்லூரிகள் மற்றும் 56 பல்கலைக்கழகங்கள் 13.5 லட்சம் மாணவர்களைக் கொண்டுள்ளன என்றும் அதில் இரண்டு லட்சம் பேர் புதியவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். செப். 15 முதல் 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்துமாறு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடரும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளுக்கான கால அட்டவணையை பட்டியலிடுமாறு அதிகரிகரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025