ஒற்றுமையே நமது நாட்டின் மிகப்பெரிய பலம் -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியுள்ளது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.அவரது உரையில், கடந்த ஆண்டில் உயிரிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது.சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது.கொரோனா பரவல், வெட்டுக்கிளி தாக்குதல், பறவைக் காய்ச்சல் என கடந்த ஆண்டில் பல சவால்களை கடந்து வந்துள்ளோம் .ஒற்றுமையே நமது நாட்டின் மிகப்பெரிய பலம். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடியிருக்கிறோம்.உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசின் கொள்கைகள் ஏழை மக்களின் தேவையை பூர்த்திசெய்து வருகிறது.வேளாண் பொருட்கள் விற்பனையில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.