இந்தியாவின் இரும்பு பாதை கடந்து வந்த பாதை (1832-2019)..!ஒரு அலசல்

Default Image

உலகிலுள்ள மிகவும் பெரிய தொடர்வண்டி வலை அமைப்புகளில் இந்திய இரயில்வே ஒன்றாகும்.அதுமட்டுமல்லாமல் இந்திய ரயில்வே நூற்றாண்டு விழா கண்ட  சிறப்பு உடையது.
முதன்முதலில்இந்திய  இரயில் போக்குவரத்திற்காக ஒரு திட்டம் 1832- ல் தான் அப்போதைய ஆங்கில அரசால் பரிந்துரைக்கப்பட்டது. என்றாலும் அந்த திட்டம் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்தவித ஒரு  நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது என்று தான் கூறுகிறார்கள்
Image result for ரயில் போக்குவரத்து இந்தியா ஆங்கிலேயர்
அதன் பின் இந்தியாவிலே 1837 முதல் ரயில் ஆனது செங்குன்றம் முதல் சிந்தாரிரி பேட்டை உள்ள பாலம் வரை ஓடியது இதனை அப்பொழுது   ரெட் ஹில் ரெயில்வே என்று தான் அழைத்தார்கள்.இதில் சிறப்பம்சமாக  வில்லியம் ஏவரியால் தயாரிக்கப்பட்ட ரோட்டரி நீராவி என்ஜினியரைப் பயன்படுத்தியது ஆங்கில அரசு. அந்த காலக்கட்டத்தில் இரயில்வே சர் ஆர்தர் கோட்டனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலமாக  சென்னை நகரத்திற்கு தேவையான சாலை மற்றும் கட்டுமான பணிக்காக  கிரானைட் போன்ற கற்களை கொண்டு செல்லும் சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
Image result for இரயில் போக்குவரத்து இந்தியா
இது மாபெரும் ஒரு சாதனமாக இருக்கவே அந்த காலக்கட்டத்தில் கவர்னர் ஜெனரலான ஹார்டிங்கே 1844-ல் தனியார் போக்குவரத்தை இரயில்வேயில் அனுமதித்தார் இதன் படி 2 புதிய நிறுவனங்கள் உருவாகியது.இதற்கு இந்தியாவை 200 வருடங்கள் ஆண்ட அந்த ஒற்றை கம்பெனியான கிழக்கிந்திய கம்பெனியின் உதவியை இரயில்வே பெற்றது.இதன் காரணமாக பல ஆங்கிலேய முதலீளிட்டார்கள் ஆர்வம் கொண்டனர் இவர்களின் ஆர்வத்தால் சில ஆண்டுகளில் அதிகப்படியான இரயில் நிறுவனங்கள் தோன்றியதற்கு முக்கிய காரணாமாக சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு அதாவது 1845-ல் கோதாவரி மீது ஒரு அணை கட்டும் பணியில் இறங்கிய திட்டத்திற்கு கற்கள் வழங்கும் பணிக்காக இதனை  பயன்படுத்தியது.இதன் முலம் உருவான ராஜமுந்திரி –தவுலேஸ்வரம்  ஆன   கோடாரிய அணை கட்டடம் இரயில்வேயால் கட்டப்பட்டது.
அதே போன்று 1851-ல் சோலனி அக்யுடுட் ரயில்வேயும் கட்டப்பட்டது  தாம்சன்  என்ற நீராவி என்ஜின் மூலமாக சோலனி ஆற்றின் மீது ஒரு நீர்வழி பாலம் கட்டுமானத்திற்காகவும் கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
Related image
இத்தனை கட்டங்களாக தொடர்ந்த இரயில்வே பயணம் ஆனது அதிகார பூர்வமாக மற்றும்  முதல் முதலாக பயணிகளை நிரப்பி கொண்டு 16 ஏப்ரல் 1853 –ல்மும்பைக்கும் – தானேக்கும் இடையே முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.அப்படி இயக்கப்பட்ட அந்த பாதையின் நீளம் 34 கிலோமிட்டர் தான்.அது தான் இன்று நாடு முழுவதும் விரிந்து கிடக்க அடித்தளம் மீட்டது.
அப்போது இந்தியாவை தன் வசம் வைத்திருந்த ஆங்கில அரசு தனியார் இரயில் போக்குவரத்தாக தான் பார்த்தது.
Related image
மேலும் அதனை வணிக ரீதியாக ஊக்குவித்தது இதன காரணமாக நிறைய நிறுவனங்கள் துவங்கியது. இந்த திட்டம்  எல்லாம் நிறைவடைந்த பின்னர் இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தெரிவிக்கப்பட்டது. என்றாலும் இந்த நிர்வாகத்தினை தனியாரே எடுத்து நடத்தினர்.
ஆங்கில அரசு 1870 களில் ஒரு வலையமைப்பை இரயில்வேகென்று அமைத்தது.அது வடிவம் பெற்று அடுத்த 10 ஆண்டுகளில்அதாவது 1880-ல்  இந்த வலையமைப்பானது இந்தியாவில் சுமார் 14,500 கி.மீ  நீளம் வரை நீண்டு  கொண்டிருந்தது. இதில் பல பகுதிகள்  நாட்டின் மூன்று முக்கிய நகரங்களாக திகழ்ந்தமும்பை மற்றும் கொல்கத்தா அதனோடு சென்னை  ஆகியவைகளை  நாட்டின் உட்பகுதிகளை இணைத்ததில் முக்கிய பங்கற்றியது.
Related image
அடுத்த ஒரு 15 வருடங்களில் அதாவது 1895-ல் இருந்து இந்தியா சொந்தமாகவே  இரயில் எஞ்சின்களை தயாரிக்க ஆரம்பித்த காலக்கட்டம் என்றால் அது தான். தற்போது உள்ள ஆந்திரா,ஒரிஸா ,ராஜஸ்தான் போன்ற  மாநிலங்களில் முன்பு இருந்த இராஜ்ஜியங்கள்  தங்களுக்கென்று இரயில் அமைப்புகளை ஆரம்பிக்க தொடங்கின.
இப்படி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து மாபெரும் போக்குவரத்து சாதனமாக மாறிய இதற்கு 1901-ம் ஆண்டு தான் இரயில்வே வாரியம் என்ற ஒன்றே ஆரம்பிக்கப்பட்டது.வாரியம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன்  அதிகாரங்கள் எல்லாம் ஆங்கில அரசின் வைசிராய் இருந்த கர்சன் பிரபுவிடம் தான் இருந்தது.
இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் இரயில்வே வாரியம் ஆங்கில அரசின் வணிகம் மற்றும் தொழில் துறையின் இவற்றின் கீழ் இயங்கியது. இதில் தலா 3 உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய இரயில்வே ஊழியர் ஒருவர் இவரே தலைவராக இருப்பார், அதன் பின் ஒரு இரயில்வே மேலாளர் அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு இரயில்வே நிறுவனத்தின் முகவர் ஆகிய மூவர் இதில் இடம்பெற்றனர்.இதில் ஆங்கில அரசை ஆச்சர்யம் முட்டிய விஷயம் என்றால் வரலாற்றில் முதன்முறையாக இரயில்வே லாபம் ஈட்டியது தான்.
Image result for ரயில்கள் ஆங்கிலேயர்
இதனை கருத்தில் கொண்டு 1907-ல் அனைத்து இரயில் நிறுவனங்களும் அரசினால் கையகப்படுத்தப்பட்டு அரசின் நேரடி பார்வையில் செயல்பட்டது. இந்த நடவடிக்கை நடந்த அடுத்த ஆண்டே மின்சார இரயிலும் அறிமுகப்படுத்தப் பட்டது.
முதல் உலகப்போரில் பங்கு கொண்டிருந்த இங்கிலாந்து இந்தியாவிற்கு வெளியே இரயில்வேயினை இயக்கியது. இந்த போரின் முடிவில் இரயில்வேக்கு பலமான அடி விழுந்தது உடன் மோசமான நிலையில் செய்ல்ப்ப்டு கொண்டிருந்தது.சாமளிக்க முடியாமல் 1920-ல் ஆங்கிலயே அரசு, இரயில்வே நிதி மற்றும் அரசின் மற்ற வருவாயினையும் தனியாகப் பிரித்தது.
Related image
இதற்கிடையில் 2 வது உலகப்போர் மூண்டது.போரில் தீவிரமாக ஈடுபட்ட ஆங்கிலேயே அரசு இந்தியாவில் உள்ள இரயில்கள் எல்லாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி விட்டது. இரண்டாம் உலகப்போர் இங்கிலாந்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தியது.
பின்னர் 1947-ல் இந்தியா சுதந்திர நாடானது.அந்த சமயத்தில் இரயில்வேயின் பெரும்பாலான பகுதிகள் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான்  நாட்டுக்குச் சொந்தமாகியது.
Related image
இந்திவாவில் சமஸ்தானங்கள் காணப்பட்டது.அந்த காலக்கட்டத்தில் 32 இரயில் அமைப்புகளோடு மொத்தம் 42 இரயில் அமைப்புகள் அதனோடு ஒன்றிணைக்கப்பட்டு அதற்கு இந்திய இரயில்வே என்று பெயரிடப்பட்டது.
 
ஆனாலும் 1951-ல் இந்த இரயில்வே அமைப்பு முறை கைவிடப்பட்டது.அதற்கு பதிலாக  அவை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படி இந்திய இரயில்வேயில் 1952 ஆண்டு மட்டும் மொத்தம் 6 மண்டலங்கள் இருந்தது. படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாக இரயில் இயந்திரங்களை இந்தியாவே சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது.
Image result for ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய ரயில்கள்
இதன் காரணாமாக 1985 நீராவி இரயில் இயந்திரங்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.1995 இரயில் முன்பதிவு முழுவதும் கணினி  மயமாக்கப்பட்டது. தற்பொழுது மெட்ரோ,மின்சார,விரைவு ரயில் என்று பல வளர்ச்சி நிலைகளை பெற்று முன்னேறியுள்ளது.சாலைகள் இந்தியாவை இணைப்பதற்கு முன்பே தனது இரும்பு பாதை மூலமாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்