உலகிலுள்ள மிகவும் பெரிய தொடர்வண்டி வலை அமைப்புகளில் இந்திய இரயில்வே ஒன்றாகும்.அதுமட்டுமல்லாமல் இந்திய ரயில்வே நூற்றாண்டு விழா கண்ட சிறப்பு உடையது. இந்தியாவிலுள்ள மொத்த இரும்புப் பாதை நீளமானது 63,140 கிலோமிட்டர் ஆகும்
இது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயக்கப்படுகிறது. இத்தைகைய நீண்ட தொடர் அமைப்பை பெற்ற இரயிலில் மட்டும் மக்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 500 கோடி பேர் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.இவர்களில் பெரும்பாலான மக்கள் சாமானியர்கள்..
அதே போல் இரயில்வே மூலமாக 35 கோடி டன்கள் சரக்கு போக்குவரத்திற்கும் உபயோகிக்கப்படுகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றனது.இரயில்வேயில் மட்டும் 16 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இரயில் பயணம் என்ற ஒன்றை இந்தியாவில் 1853-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரத்திற்கு பின் 42 தொடர்வண்டி அமைப்புகள் மட்டுமே இருந்தது அதன்பின் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது.இதன்படி உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக இந்திய இரயில்வே உருவாகி உள்ளது.இதன்கீழ் தொலைதூர மற்றும் புறநகர் இரயில்கள் இரண்டுமே இயக்கப்பட்டு உள்ளது.
இந்திய இரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.அதே போல இந்த ஒவ்வொரு மண்டலமும் அதனுள் பல கோட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒவ்வொரு கோட்டமும் அதற்கென்று ஒரு தலைமை இடத்தினை கொண்டு செயல்படுகிறது.அப்படி இந்திய இரயில்வே மொத்தம் 67 கோட்டங்களை தன்னுடன் கொண்டுள்ளது.
இவைகள் அனைத்தும் மத்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுபட்டில் இருந்து வரும் பொதுத்துறை நிறுவனம்.மிகப்பெரிய போக்குவரத்து சாதனமாக நடுத்தர மற்றும் நாட்டை தன் ரயில்வே கீழ் இணைத்து வரும் இந்த துறைக்கு முக்கிய அமைச்சர் ஒருவர் இருப்பார், அவரோடு இதற்கான 2 இணை அமைச்சர்கள் இருப்பர்.அதோடு மட்டுமில்லை இவர்களுக்கு கீழே 6 உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒரு தலைவர் என்று மிகப்பெரிய வலையமைப்பை கொண்டே இரயில்வே வாரியம் செயல்படுகிறது.
இரயிலே வாரியத்தின் கட்டுப்பாட்டில் 17 மண்டலங்களுக்கும்பொது மேலாளர்கள் இருப்பர் இவர்கள் மூலமாக இரயில்வே வாரியத்திற்கு தேவை மற்றும் பிற வசதிகளை நேரடியாக எடுத்துரைக்கின்றன. மண்டலம் பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இதனை கோட்ட மேலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சராக தற்போது பியூஸ் கோயல் இருந்து வருகிறார். இதன் தலைமையாகம் இந்திய தலைநகரத்தில் அமைந்துள்ளது.இந்திய இரயில்வே இந்திய போக்குவரத்து சாதனங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஏனென்றால் சாமானியர்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக உள்ளது.அதனாலேயே இந்திய ரயில்வே பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…