தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக மதுரை – நாகர்கோவில் வாஞ்சி –மணியாட்சி –துத்துக்குடி –நாகர்கோவில் –திருவனந்தபுரம் இடையே இரட்டை இரயில் பாதை மற்றும் அவற்றிக்கான இரயில் தடங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாகளாக உள்ளது.
அதே போல 2014-2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கன்னியாகுமரியில் அதி நவீன இரயில் முனையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது ஆனால் அறிவிப்போடு அப்படியே நின்று விட்டது இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா.?என்று எதிர்பார்கிறார்கள்
தமிழகத்துக்கு போதிய இரயில்கள் இயக்கப்படுவதில்லை என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்தும் அவற்றில் முன்னேற்றம் காணப்படுமா என்றும் தென் தமிழகத்திற்கு போதிய இரயில்களை இயக்க தவறியதன் காரணமாக தனியார் பேருந்துகளின் அதிக கட்டணம் மற்றும் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.தஞ்சை ,நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி போன்ற சிறப்பு பெற்ற இடங்களில் இருந்து நாகர்கோவில் ,குமரி ,திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு நேரடி இரயில சேவை இல்லாதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
புல்லட் ரயில் திட்டங்கள் மற்றும் இரயில் 18 திட்டங்கள், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் திட்டங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கபடுகிறது. மைசூர் TO சென்னை மற்றும் சென்னை TO கொயம்புத்தூர் இடையில் இரயில் 18 அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது என்று கருதுகின்றனர்.இதன் உடன் ரயில் நிலையங்களில் லிஃப்ட் வசதி மற்றும் எஸ்கலேட்டர் , வைஃபை மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற திட்டங்களுக்கு என்று சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்களை ஜிபிஎஸ் மூலமாக டிராக் செய்யும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவற்றை திறன் படசெயல்படுத்த உள்ளதாகவும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இரயில் பயணத்தின் போதும் ரயில்வே வாரியத்தின் மிகப் பெரிய குறையாக பார்க்கப்படுவது விபத்துகள்.ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 300 இரயில் விபத்துகள் ஏற்படுகின்றது இவை பெரும்பாலும் மனித தவறுகளே காரணாமாக அமைகின்றது.என்றும் (83%) விபத்துகளுக்கு மனித தவறுகளே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றது.இதற்கு தீர்வு தரும் வகையில் புதிய அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்கின்றனர்.
இதே போல் இரயில்வேக்கு மற்றும் ஒரு தலைவழியாக கூட்ட நெரிசல் உள்ளது இது ஒரு முக்கிய பிரச்சனையாககும் அதில் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டி எப்போதும் ஒரு குறிப்பிடப்பட்ட அளவை மீறி தான் பயணிகளை ஏற்றிச் செல்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.இது தவி திருவிழா மற்றும் முக்கிய மாதங்களில் காத்திருப்புப் பட்டியலை என்ற ஒன்றை தவிர்க்க இருக்கைகளுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டும். அந்த சமயங்களில் பதிவு செய்த முன்பதிவு இருக்கைகளில் மற்றவர்கள் அத்துமீறி நுழைவதும் நடக்கிறது இதனை இரயில்வே நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.
இந்திய ரயில்வேயில் மற்றும் ஒரு முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது சுகாதாரம் இரயில்களில் இருக்கக் கூடிய கழிப்பறைகள் கீழே திறந்த வெளியாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.கழிவுகள் எல்லாம் அப்படியே தரையில் விழுகின்றன. இவற்றிக்கு என்று ஒரு பெட்டிகள் ஏற்படுத்தப்பட்டு சேகரிக்கப்படாமல் இருப்பது மிக பெரிய குறையாகும்.இந்த கழிவுகள் மூலமாக இரயில்களை இயக்குகின்றன மேலை நாடுகள் என்று தகவல்கள் தெரிவிக்கினறன.
இந்த கழிவுகள் இரயில்கள் நிற்கும் நிலையங்களில் சுகாதாரக்கேட்டினை ஏற்படுகிறது. மேலும் இதனை அதிகமானோர் பயன்படுத்துவதால் அந்த கழிப்பறைகளும் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஒரு தீர்வு கிடைக்க புதிய முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இது நாட்டின் சுகாதாரத்தினை மேம்படுத்த உதவும் காரணிகளில் ஒன்றாக விளங்கும் என்று எண்ணப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…