மோடி – நிர்மலா சீத்தாராம் பட்ஜெட்..! சாமானியார் என்ன எதிர்பார்கிறார்கள்..!
2019 இந்திய தேர்தலில் 2 வது முறையாக பாஜக தலைமையிலான மோடி அரசு தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள நிலையில் தான் இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் நாட்டு மக்களிடையே பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை புதியதாக நிதியமைச்சர் ஆக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த அரசின் உடைய கடைசி பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது.மேலும் இந்த பட்ஜெட்டில் வருமான வரியின் உச்ச வரம்பு சுமார் 2 1/2 லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
அதே போல ரூ. 75 ஆயிரம் கோடி வருமான காப்பீட்டு திட்டத்தையும் விவசாயிகளுக்கு கொண்டு வந்தது.
‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி ‘என்று அழைக்கப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி ரூ. 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்பார்ப்பு :
பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்புகள் ஏதும் இருக்க கூடாது என்ற எதிர்பார்க்க படுகிறது.
விவசாய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள்:
கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட வரி மற்றும் சலுகைகள் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது
வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ள நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்திரா காந்தி இந்திய பிரதமாராக இருந்த சமயத்தில் நிதித்துறையை தன்வசம் வைத்து இருந்தார்.அவரே நிதித்துறையை கவனித்த முதல் பெண் என்று கூறப்பட்டாலும் தற்போது பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனே முதல் பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.