தேசப்பாதுகாப்புக்காகவே கணினி தகவல்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது …!மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
தேசப்பாதுகாப்புக்காகவே கணினி தகவல்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியது.
மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அங்கீகாரத்தால் உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகள் அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும் அதிகாரம் உள்ளது.
இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் கணினியையும் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தேசப்பாதுகாப்புக்காகவே கணினி தகவல்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைமுறையில் இருந்த அரசாணைதான் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.