“நிலக்கரி இருப்பு உள்ளது;மின்தடை வராது” – மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதி..!

Default Image

மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்தடை ஏற்படாது என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார்.

உலகளவில் நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவில் டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் மின் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.இதற்கிடையில், மின்நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.அதில்,மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல,பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,மின்சக்தி அமைச்சகம், பிஎஸ்இஎஸ் மற்றும் டாடா பவர் அதிகாரிகள் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை குறித்து இன்று டெல்லியில் உள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உடன் ஆலோசனை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து,ஆலோசனைக்கு பிறகு,செய்தியாளர்களை சந்தித்த மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது:நாட்டில் போதிய நிலக்கரி இருப்பு கையில் உள்ளது,மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்சார தடை ஏற்படாது.

உண்மையில், எந்த நெருக்கடியும் இல்லை, இல்லை. இது தேவையில்லாமல் உருவாக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தக்கூடிய ஆதாரமற்ற எஸ்எம்எஸ் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாடா பவர் சிஇஓவை நான் எச்சரித்தேன். கெயில் மற்றும் டாடா பவரின் செய்திகள் பொறுப்பற்ற நடத்தையின் செயல்களாக உள்ளன.

ஏனெனில்,மின் நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான நிலக்கரி கிடைக்கிறது.மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறாக உள்ளது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன் ஆகும், இது 4 நாட்களுக்கு தேவையானது.

அதன் பிறகு,மின் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 1.7 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.நான் நிலக்கரி மற்றும் சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியுடன் தொடர்பில் இருக்கிறேன்.மேலும்,நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களுக்கு தேவையான அளவு எரிவாயுவை தொடர்ந்து வழங்குமாறு நான் கெயில் சிஎம்டியிடம் கேட்டேன். விநியோகம் தொடரும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். கடந்த காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இல்லை, எதிர்காலத்தில் அது நடக்காது”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்