PM Modi [Image source : PTI]
வெளிநாட்டு பயணங்கள் முடித்து நாடு திருப்பிய பிரதமர் மோடியை மத்திய அமைச்சர்கள் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அரசு முறை பயணங்களை முடிந்து கொண்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார். கடந்த 20ஆம் தேதி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதில் அமெரிக்க நியூயார்க்கில் ஐநா சார்பாக நடைபெற்ற யோகா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி வெள்ளை மாளிகை சிறப்பு விருந்தில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு எகிப்து நாட்டுக்கு புறப்பட்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், எகிப்து நாட்டின் உயரிய விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த பயணங்களை முடித்து கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக எம்பிக்கள் வரவேற்றனர்.
அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் மோடி குறிப்பிடுகையில், இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு உலக நன்மைக்கான ஒரு சக்தியாகும். அது உலகத்தை நிலையானதாக மற்றும் என குறிப்பிட்டார்.
எகிப்து நாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி குறிப்பிடுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு பயணம். இந்தியா -எகிப்து இடையேயான நட்புறவை இது மேலும் வலுசேர்க்கும். இது நமது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…