விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது.
லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர்களுக்கும் கருப்புக் கொடி காட்டியதால் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு புகுந்த காரில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டு காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், அருகில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு வந்து கோஷங்களை எழுப்பினர் என தெரிவித்தனர்.
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…