ஹமாஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா.? நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி.! மத்திய அமைச்சர் பதில்!

Meenakshi Lekhi

இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது. இதனால், ஆக்கிரமைப்பு தொடர்பாக பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான பிரச்சனை  நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய  தாக்குதலில் இருந்து, இருதரப்பு மக்களின் வாழ்க்கையே சிதைந்து விட்டது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை  தொடங்கிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இதுவரை தொடர்ந்து வருகிறது.

அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 64 வது நாளான இன்றும் நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமில்லாமல், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியோர் என பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்வதாக இஸ்ரேல் குற்றசாட்டியுள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பினரை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளை இஸ்ரேல் வற்புறுத்தி வருகிறது.

குஜராத்தில் போலி சுங்கச் சாவடி மூலம் கோடிக்கணக்கில் மோசடி… தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலுக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுமா என நாடாளுமன்ற மக்களவையில் கேரள எம்பி கேள்வி எழுப்பியிருந்தார். கேரள எம்பி சுதாகரனின் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி சார்பில் எழுத்துபூர்வாக பதில் அளித்ததாகவும், கடிதம் ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த கடிதத்தில், ஒரு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை அந்தந்த துறை சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என பதில் கூறியிருந்தார். இதையடுத்து, மீனாட்சி லேகி சார்பில் வெளியானதாக கூறப்பட்ட அந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடை செய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என எக்ஸ் தளத்தில் ஒருவர் இணையமைச்சர் மீனாட்சி லெகியை டேக் செய்து கேட்டிருந்தார்.

இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்த மீனாட்சி லெகி, உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ்  அமைப்பு குறித்த பதில் எனது ஒப்புதலின்றி வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்த எந்த பதிலும் நான் கையெழுத்துயிடவில்லை. ஹமாஸ் அமைப்புக்கு தடை என எந்த ஒப்புதலும் நான் அளிக்கவில்லை என்றார்.

எனவே, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் இல்லாமல் எழுத்துப்பூர்வமான பதில் தரப்படுகின்றனவா? என கேள்வி எழுந்துள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்து கேரளா எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பெயரில் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்ட நிலையில், இந்த கேள்விக்கான எந்த கோப்பிலும் தான் கையொப்பமிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

 

மேலும், இந்த பிரச்சனை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கிறோம் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
RKFI -scamers
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya