போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கும் தளத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர்கள்..!

Default Image

ராணுவ போர் விமானங்கள் நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்கள்.

ராஜஸ்தான்( பார்மரில் ) தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில் அவசரகால தரையிறங்கும் தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இங்கு ராணுவ போர் விமானங்கள் நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும்.

பாரத்மாலா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பார்மர் மற்றும் ஜலூர் மாவட்டங்களின் கிராமங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு எல்லைப் பகுதியில் அதன் இருப்பிடம் இந்திய இராணுவத்திற்கு கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்.

அவசர காலங்களில் விமானத்தை தரையிறக்க இந்திய விமானப்படையால் தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இருப்பினும், முன்னதாக 2017 ஆம் ஆண்டில், போர் விமானங்கள் ஆக்ரா-யமுனா விரைவுச்சாலையில் தரையிறக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்