கொரோனா பணியில் மத்திய அமைச்சர் மகள்..!
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் மகள் திஷா கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வந்த பிறகு நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. கடந்த பல நாட்களாக, தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் சிகிக்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள்மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் மகள் திஷா சமீபத்தில் டாக்டரானார். தனது மகள் பணியில் சேர்ந்த பிறகு, தனது மகளை புகைப்படம் பகிர்ந்துகொண்டு மகளை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில் என் மகள் திஷாவை இந்த வேடத்தில் உங்களைப் பார்க்க நான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். இந்த கடினமான நேரத்தில் நீங்கள் ஒரு பயிற்சியாளராக உங்கள் கடமையைச் செய்கிறீர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். தேசத்திற்கு உங்கள் சேவை தேவை, நீங்கள் உங்களை நிரூபிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என தனது மகள் புகைப்படத்தை பகிந்து தெரிவந்துள்ளார்.
My Daughter, My Pride!
Disha, I have waited so long to see you in this role. I am filled with pride that you are rendering your duty as an Intern in this critical time. The nation needs your service and I’m sure you will prove yourself.
More power to you my warrior! pic.twitter.com/Kjm4MtKyaT
— Mansukh Mandaviya (@mansukhmandviya) April 26, 2021