அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நிதிஷ்குமார் கலந்துகொள்ள மாட்டார்.! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்.!
மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நிதிஷ்குமார் கலந்துகொள்ள மாட்டார் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
2023 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் தேர்தல் களம், கூட்டணி என ஆரம்பித்து பல தலைவர் பிரச்சாரம் வரை சென்று விட்டனர். பாஜக தனது தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், காங்கிரஸ் , திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , ஆம் ஆத்மி என இந்தியா கூட்டணி கட்சிகளும் தேர்தலில் வேளைகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பாட்னாவில் ஆலோசனை கூட்டம், அடுத்து, காங்கிரஸ் தலைமையில் மும்பையில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் என நடத்தினர். இதில் பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய அரசியல் தலைவரான நிதிஷ்குமாருக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால், அவர் பெங்களூருவில் இருந்து விரைவாக சென்று விட்டார் என்றும், எந்த நேரத்திலும் அவர் பாஜக கூட்டணியில் இணையலாம் எனவும் ராம்தாஸ் அத்வாலே கூறினார். மேலும், அவர் அடுத்து மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.